கல்விச் சேவை

SSB கல்விப் பணி

கல்வியே அறியாமை என்னும் இருளை நீக்கும் ஒளி

கல்வி மேம்பாடு

நாற்றங்கால் முதல் உயர்கல்வி வரை ஒரு பயணம்

கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதையும், வறுமை அவர்களின் கல்விக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதையும் SSB அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்களின் கனவுகளை நனவாக்க தேவையான அனைத்து கல்வி உதவிகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்.

ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

எங்கள் கல்வித் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (Scholarships)
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள்
  • உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த இலவச வழிகாட்டுதல் முகாம்கள்
  • கிராமப்புற மாணவர்களுக்கான மாலை நேர பயிற்சி வகுப்புகள்
  • போட்டித் தேர்வுகளுக்கான (TNPSC, NEET) அடிப்படை பயிற்சிகள்
  • கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஊர்வலங்கள் மற்றும் போட்டிகள்
எங்கள் சேவைகள்

நாங்கள் வழங்கும் கல்வி உதவிகள்

பாடப்புத்தக உதவி

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல்.

உயர்கல்வி நிதி

வசதி குறைந்த மாணவர்களின் கல்லூரி கட்டணங்களை ஏற்று அவர்களின் படிப்பை உறுதி செய்தல்.

வழிகாட்டுதல்

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சரியான படிப்பை தேர்வு செய்ய ஆலோசனைகள் வழங்குதல்.

திறன் போட்டிகள்

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர பேச்சப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்துதல்.

உங்கள் பிள்ளையின் கல்விக்கு உதவி வேண்டுமா?

இன்றே எங்களை தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள்.